இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களினால் வெற்றி...

Friday, 08 November 2019 - 20:41

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+76+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
நியூஸிலாந்து அணியுடனான 4ஆவது 20 க்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

நியூஸிலாந்தின் நெபியரில் இந்தப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துப்பாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

டேவிட் மாலன் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்ததுடன், ஒயின் மோகன் 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 16.5 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்விடைந்தது.

இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2 க்கு 2 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இரண்டு அணிகளுக்கு இடையிலான இறுதி 20க்கு 20 போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது