பிரதமர் பொறுப்புக்கூற வேண்டும்

Saturday, 09 November 2019 - 9:25

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைய நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

அதனை முன்கொண்டு செல்வோம்.

புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுவது தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரத்தை பகிர்வோம்.

அரசியலமைப்பின் அடிப்படையில் மூன்று விடயங்கள் உள்ளன.

நிறைவேற்று அதிகாரம் இருப்பினும் பிரதமரின் அனுமதியின் பேரிலேயே ஜனாதிபதி செயற்படவேண்டும்.

இதற்கமைய அனைத்து செயற்பாடுகளுக்கும் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.