எதிர்காலத்தில் மீண்டும்....

Saturday, 09 November 2019 - 7:34

+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D....
விவசாய காப்புறதியையும், விவசாய ஓய்வூதியத்தை எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை – தம்புளுகம பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தங்களது ஆட்சியின் கீழ் அனைத்து விவசாய கடன்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேபோல் விவசாய காப்புறுதி மற்றும் விவசாய ஓய்வூதியம் என்பன மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், விவசாயிகளை வாழ்விப்பதற்கான அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் குறைந்த செலவில் கூடுதல் வருமானத்தை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தொழிநுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் வெங்காய உற்பத்தியாளர்களே அதிகளவில் உள்ளனர்.

எனினும், தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு விவசாயிகள் குறித்து அவதானம் செலுத்தாமல், வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதனால், இன்று வெங்காயம் பயிரிடப்படுவதில்லை.

இந்த நிலையில், தங்களது ஆட்சியின்கீழ், தம்புள்ளை மக்களை முழு நாட்டுக்கும் வெங்காயத்தை வழங்கும் பிரதேசமாக மாற்றப்படவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வெங்காயத்திற்கு நியாயமான விலை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபகஷ, முன்னோக்கி கொண்டுசெல்லப்பட இருந்த நாட்டை தற்போதைய அரசாங்கம் பின்னோக்கி கொண்டுசென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சியில் இருந்தாலும், நாடு குறித்து சிந்தித்து வாக்களிப்பதற்கு மக்கள் தயாராக உள்ளமை தெளிவாக தெரிகிறது.

நாட்டைப் பாதுகாத்து முன்னோக்கி செல்வதற்கு மக்களின் ஆதரவை தங்களுக்கு வழங்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 16 ஆம் திகதி மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து, 17ஆம், 18ஆம் திகதியாகும்போது கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.