அநுரகுமாரவின் அதிரடி

Saturday, 09 November 2019 - 7:35

+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
திருப்த்திமிக்க அரச சேவையை கட்டியெழுப்புவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருப்தியுடன் கூடிய அரசசேவையை நாங்கள் உருவாக்குவோம்.

அவ்வாறு உருவாக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு அரச நிறுவனத்திலாவது மக்களின் காலத்தை வீணடிப்பார்களாயின் அந்த அரச சேவை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நாம் பின்னிற்க மாட்டோம்.

மக்களின் நேரத்தை வீண் விரயம் செய்யும் அரச சேவையினை நிறுத்திவிடுவதே எமது கொள்கையாகும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.