18 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு

Saturday, 09 November 2019 - 12:57

18+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
காரைத்தீவு கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த ஆயிரத்து 18 கிலோ பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

52 பொதிகளில் இந்த பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவருதற்காக குறித்த பீடி சுற்றும் இலைகளை இவ்வாறு கடலில் மிதக்கவிட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 48 ஆயிரம் கிலோ பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.