சஜித் பிரேமதாசவின் அதிரடி..!!

Saturday, 09 November 2019 - 9:27

%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF..%21%21
மன்னார் மாவட்டத்தை அபிவிருத்திமிக்க பிரதேசமாக மாற்றுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 16 ஆம் திகதி மேலதிக வாக்குகளால் தங்களை வெற்றியடைய செய்ய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஜனாதிபதியானதன் பின்னர் இந்த பகுதிக்கு வந்து எமது மக்களுக்கு தேவையான உச்சபட்ச சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தம்மை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் போது மன்னார் மாவட்டம் அபிவிருத்தி மிக்க பிரதேசமாக மாற்றமடையும் எனத் தெரிவித்துள்ளார்.