மின்சாரம் துண்டிப்பு

Saturday, 09 November 2019 - 10:17

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை திடீரென மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விமான நிலையத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தின் பிரதான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 8.50 அளவில் இந்த மின்சாரத் தடை ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

சுமார் 30 நிமிடங்கள் அளவில் இந்த மின்சார விநியோகத்தடை நீடித்திருந்தபோதும், அங்கு தானியங்கி மின்பிறப்பாக்கி எதுவும் செயற்பட்டிருக்கவில்லை என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.