அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு

Saturday, 09 November 2019 - 11:39

%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF++%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த காணி இந்துக்களுடையது என்று இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, அங்கு ராமர் கோவிலை அமைப்பதற்கும் அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், முஸ்லிம்களுக்கு மாற்று காணி வழங்கவும் இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உட்பட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வினரால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் விஸ்தீரமான நிலத்திற்கு  கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகள் உரிமை கோரியிருந்தன.

இதற்கயைம, அயோத்திக்காக சுமார் 28 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் அயோத்தி வழக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு,  கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியுடன் விசாரணை நிறைவுபெற்றபோதும், தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முற்பகல் இந்திய உயர்நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதற்கமைய, அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு இந்திய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராமர் கோயில் கட்டுவாதற்காக இந்திய மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேநேரம், இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசளை அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 3 மாதத்தில் அந்த இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.