சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20க்கு20 கிரிக்கட் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் வென்ற பங்களாதேஸ் அணி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
எனினும் இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலளித்தாடிய பங்களாஸ் அணி 19.2 ஓவர்களில், 144 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோற்றது.
இந்த தொடரின் நாயகனாகவும், நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாகவும், இந்தியாவின் தீபக் சஹார் தெரிவானார்.