பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் பலி

Monday, 11 November 2019 - 13:38

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
சிரியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடகிழக்கு பகுதியான சுலுக் ளுரடரம நகரில் இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த பயங்கரவாத தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க்காத நிலையில், துருக்கி அரசாங்கம் குர்திஷ் போராளிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த வாரம் சிரியா மற்றும் துருக்கி எல்லைப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.