2 ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்..

Monday, 11 November 2019 - 13:26

2+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 2 ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
 
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பிரயாணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்த்து அவர்களுக்கான சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இறக்குமதி செய்யப்படவுள்ள பேருந்துகளில் அதிகளவானவை சொகுசு ரக பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.