பயங்கரவாதிகளை நாடு கடத்த தீர்மானம்..

Monday, 11 November 2019 - 19:44

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
துருக்கியில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலிமன் சொய்லு தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய இன்று அமெரிக்க ஆயுததாரி ஒருவர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், மேலும் 7 ஜேர்மன் ஆயுததாரிகள் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, அமெரிக்க பயங்கரவாத ஆயுததாரி குறித்த விசாரணைகள் அங்காரா அதிகாரிகளினால் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துருக்கிய அரசாங்கம் சுமார் 2 ஆயிரத்து 500 ஆயததாரிகளை, அவர்களது நாடுகளுக்கு விசாரணை ஆவணங்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜிஹாத் ஆயுத குழுவை சேர்ந்த 813 பேர் தற்போது 12 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.