அதிரடியாக களமிறக்கப்படும் பாதுகாப்பு பிரிவினர் எண்ணிக்கை..!!

Tuesday, 12 November 2019 - 7:41

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21%21
நாடுமுழுவதும் உள்ள 12 ஆயிரத்து 856 வாக்களிப்பு நிலையங்களுக்காக 25 ஆயிரத்து 712 காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட உள்ளனர்.
 
6 ஆயிரத்து 86 காவல்துறையினர் நாடுமுழுவதும் நடமாடும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், 6 ஆயிரத்து 86 சிவில் பாதுகாப்பு தரப்பினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
 
இதேநேரம், வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்து 193 காவல்துறையினர் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
 
கலகம் அடக்கும் பணிக்காக ஆயிரத்து 233 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
வீதித் தடைகளுக்கான பணிகளை ஆயிரத்து 688 காவல்துறையினரும், 190 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்ள உள்ளனர்.
 
இதற்கமைய, குறித்த கடமைகள் உட்பட ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏனைய கடமைகளுக்காக 60 ஆயிரத்து 175 காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 
அத்துடன், 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளை மேற்கொள்ள உள்ளனர்.
 
இதேவேளை, மேலும் சில கடமைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.