தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் ..

Sunday, 01 December 2019 - 13:15

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+..
ஊவா மாகாணம், சப்ரகமுவ, உடபுசலாவ மற்றும் நுவரஎலிய மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவபெயர்ச்சி காலம் காரணமாக தற்போது இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்த பிரதேசங்கள் ஈரலிப்பு தன்மையை கொண்டுள்ளது.

இதன் காரணமாக 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேயிலை உற்பத்தி மேலும் வீழ்ச்சியடையலாம் என தேயிலை உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும், தெரிவு செய்யப்பட்ட சில தேயிலை வகைகள் மேற்கு பிராந்திய தேயிலை தொழில்சாலைகளில் வழமை போல உற்பத்தி செய்யப்படுகின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை எந்த பாதிப்பும் இன்றி இந்த தொழில்சாலைகளில் வழமை போன்று உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மொத்தமாக 59 லட்சத்து 84 ஆயிரத்து 625 கிலோ கிராம் தோயிலை ஏல விற்பனைக்காக விடப்பட்டது.