தேவாலயத்தில் துப்பாக்கி பிரயோகம் - 14 பேர் பலி

Monday, 02 December 2019 - 7:35

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+14+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினோ பசோவில் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயதம் ஏந்திய குழுவொன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த தாக்குதலுக்கான பொறுப்பை எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரை ஏற்கவில்லை.

தொடர்தும் இது போன்ற சம்பவங்கள் மேற்கு ஆப்ரிக்க எல்லைப்பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் இந்த தாக்குதல்கள் மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.