ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் முக்கிய பணிப்புரை

Monday, 02 December 2019 - 7:30

%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
இலங்கையின் பொருளாதார மத்திய நிலையமான கொழும்பு துறைமுகத்தை சுத்தமானதாக மாற்றியமைக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை, வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளிற்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

துறைமுக வளாகத்தினுள் ஆங்காங்கே குப்பைகளை இடுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், துறைமுக வளாகத்தில் உள்ள கழிவுகளை மிக விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகளவில் ஈர்க்க முடியும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.