வீடுகள் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

Monday, 02 December 2019 - 12:01

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
தமிழகம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் முன்று வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

அந்த இடிபாடுகளில் சிக்கி 2 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மேலும் பலர் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகளில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.