முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றது

Monday, 02 December 2019 - 14:17

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைப்பெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தினை ரனுக பிரபாத் பெற்றுக் கொடுத்துள்ளார்.

17 தொடக்கம் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான டைகொண்டோ போட்டியிலேயே அவர் தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.

அதேபோல, மகளிர் கராத்தே போட்டியில் ஹன்சிகா ஹேஷானி ஹெட்டியாராய்ச்சி வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று நடைபெறும் ஆண்,பெண் இருபாலாருக்குமான 100 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.