ஜனாதிபதியை சந்தித்த டேவிட் மெகினோன்

Monday, 02 December 2019 - 15:51

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கனேடியே உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் உயர்ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகம் வூ ஜியாங்கோவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.