ராஜித்த சேனாரத்ன மீது குற்றச்சாட்டு..

Monday, 02 December 2019 - 19:09

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் ஒளடத தட்டுப்பாடு தொடர்பில் எந்தவொரு கருத்தினையும் வெளியிட வேண்டாம் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்கு தொலைபேசி ஊடாக முன்னாள் அமைச்சர் அவதூராக பேசியதாக அவர் எமது செய்தி சேவைக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நாளாந்தம் ஒளடத பற்றாக்குறை தீவிரம் அடைந்து வந்த நிலையில் அதனை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அந்த ஒளடதங்களை தனியார் பிரிவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு மருத்துவமனையின் பணிப்பாளருக்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்த போதிலும் அவர் அதற்கான நிதியை பெற்றுத்தரவில்லை என அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு வார காலப்பகுதியில் பற்றாக்குறையாக இருந்த பெரும்பாலான ஒளடதங்கள் மருத்துவ மனைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்;பாளர் வசந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.