திருகோணமலை பொது மருத்துவமனையில் 66 டெங்கு நோயாளர்கள்..

Monday, 02 December 2019 - 19:20

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+66+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
திருகோணமலை பொது மருத்துவமனையில் 66 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளர்களிடம் மேற்கொள்ளப்படும் குருதி பரிசோதனையின் போது இந்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கர்ப்பிணி பெண்ணொருவரும் 26 சிறுவர்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேலாக தொடரும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு செல்லுமாறும் திருகோணமலை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.