வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி...!!

Monday, 02 December 2019 - 19:51

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21++++
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த கடும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா - வலப்பனை - மலப்பத்தாவ பகுதியில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரது இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன.

வலப்பனை - மலப்பத்தாவ பொது மயானத்தில் இந்த இறுதி கிரியைகள் இடம்பெற்றன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந் 121 பேரும், பிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அவதானிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தொடரும் மழைக்காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிரித்து வருகின்றது.

கிளிநொச்சியில் உள்ள நீர்பாசன குளங்கள் சில வான்பாய ஆரம்பித்துள்ளது.

மேலும் சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்து வருவதாக நீர்பாசண திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரை 25.2 அடியாக உயர்ந்துள்ளது.

இதேவேளை அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும், புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடமுருட்டி குளம், பிரமந்தனாறுகுளம், வன்னேரிக்குளம், கல்மடுகுளம் ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

குறித்த குளம் இன்று இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் நீர் நிலைகளில் நீராட செல்லுதல், சிறார்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 297 குடும்பங்களை சேர்ந்த நான்காயிரத்து 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆயிரத்து 130 குடும்பங்களை சேர்ந்த நான்காயிரத்து 9 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்களின் வீடுகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.