சுற்றாடல் தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெயினில்...

Monday, 02 December 2019 - 21:07

+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
சுற்றாடல் மாசடைவது தொடர்பாக சர்வதேச ரீதியாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றாடல் தொடர்பான சர்வதேச மாநாடொன்று ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் நடைபெறவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த மாநாட்டில் 50 இற்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்கள், சுற்றாடல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த தருணத்தில் சுற்றாடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வினை எட்டும் வகையிலான சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பற்ற நிலை காரணமாக கோடிக்கணக்கான கணக்கான ஆபிரிக்க மக்கள் பட்டினியை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சிறுவர் நிதியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் 3 கோடியே 30 லட்சம் மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய வரட்சி மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.