நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்தமானி அறிவித்தல் வெளியானது..!

Monday, 02 December 2019 - 21:46

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21
8வது நாடாளுமன்றத்தின் 3வது கூட்டத் தொடரை இடைநிறுத்தும் வர்த்தமானி நேற்றிரவு வெளியானது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் ரத்தாகியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

புதிய கூட்டத்தொடரானது ஜனாதிபதியின் தலைமையில் கீழ் ஆரம்பிக்கப்பட்டு அதில் அவர் சிம்மாசன உரையை ஆற்றுவது சம்பிரதாயமாகும்.

அதேநேரம் இந்த காலப்பகுதியில் சில தெரிவுக்குழுக்களும் கலைக்கப்படும்.

இதன்படி, புதிய அமர்வின் போது நாடாளுமன்ற நடவடிக்கைளுக்காக புதிய தெரிவுக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.