சீரற்ற காலநிலையால் நான்காயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Tuesday, 03 December 2019 - 7:40

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சீரற்ற காலநிலை காரணாக 14 மாவட்டங்களை சேர்ந்த 34 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 4 ஆயிரத்து 153 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்;து 164 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 946 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 149 பேர் 29 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்க கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.