மீட்பு பணிகளில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்து- மூவர் பலி

Tuesday, 03 December 2019 - 7:43

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பிரான்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட ஈ.சீ 145 என்ற சிறிய ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக பிரான்ஸின் வார் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்துள்ள நிலையில், அங்கு நிலவிய சீரற்ற வானிலைக்காரணமாக இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக உலங்கு வானூர்தியில் பயணித்த மூன்று பாதுகாப்பு படை உறுப்பினர் பலியாகினர்.

அதேநேரம், பிரான்ஸின் மழை வெள்ளத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.