இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Tuesday, 03 December 2019 - 7:45

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
அனுமதி பெற்ற வங்கிகளின் கடன் வட்டி வீதமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் குறிப்பிடத்தக்க அளவை விட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடனுக்கான வட்டிவீதத்தை குறைப்பதன் ஊடாக கடனுக்கான கோரிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் அளவில் கடனுக்கான வட்டி வீதத்திற்கு உயர் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதில் அனுமதி பெற்ற வங்கிகளில் வைப்பீட்டுக்கான வட்டி வீத்தத்திற்கு பதிலாக விதிக்கப்பட்ட ஆகக்கூடிய வட்டி வீத வரையறை நீக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.