கம்மூரி சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பாதிப்பு

Tuesday, 03 December 2019 - 12:58

%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள கம்மூரி சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளியின் சீற்றம் காரணமாக மனிலா சர்வதேச விமான நிலையத்தில், 12 மணித்தியாலங்கள் வரையில் பயணிகள் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கம்மூரி சூறாவளிக் காரணமாக பிலிப்பைன்ஸின் தெற்கு லூஷோன் பகுதி, அதிகளவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், தொடர்ந்தும் கம்மூரி சூறாவளி பிலிப்பைன்ஸில் நிலைக்கொண்டுள்ளதாகவும் மணித்தியாலயத்திற்கு 214 கிலோமீற்றர் வேகத்தில் அங்கு கடும் காற்று வீசுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் மனிலா சர்வதேச விமான நிலையத்தின் பணிகளை இன்று முற்பகல் 11 மணிமுதல் 12 மணித்தியாலய காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.