நோர்வே மற்றும் இத்தாலி நாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு..!

Tuesday, 03 December 2019 - 9:40

%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தூர நோக்குடனான திட்டங்களுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக இத்தாலி மற்றும் நோர்வே நாட்டு தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீடா பீ.மானெல்ல நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இதன்போது, புதய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இத்தாலி தூதுவர், எதிர்காலத்தில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைனி ஜொரான்லி எஸ்கெடேல் உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியை நேற்றைய தினம் சந்தித்தனர்.

ஜனாதபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதியின் புதிய முயற்சிகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் நோர்வே தூதுவர் இதன்போது தெரிவித்தார்.