கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Tuesday, 03 December 2019 - 10:14

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
புத்தளம்-கொட்டுகச்சிய-கிவுல பிரதேசத்தில் உள்ள கிணரொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.