ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோர் மீள விளக்கமறியலில்...

Tuesday, 03 December 2019 - 10:06

%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் கட்டாய விடுமுறயிலுள்ள காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வழக்கில் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மேலும் 10 காவற்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவுதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிவித்துள்ளனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர்கள் இருவருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, தமக்கு பிணை வழங்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.