பௌசியை விலக்குவதற்கான கடிதத்தில் கைச்சாத்து- மஹிந்த அமரவீர

Tuesday, 03 December 2019 - 13:12

%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் அடிப்படையில் சகல நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியை விலக்குவதற்கான கடிதத்தில் தான் கடந்த வாரம் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

இல்லையெனின் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்படும்.

அதேபோன்று கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்ட ஏனையவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போது கட்சியின் எந்த பதவிகளையும் வகிக்கவில்லை ஆகவே அவர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.