இந்தியாவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம்- த.தே.கூட்டமைப்பு

Tuesday, 03 December 2019 - 13:14

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%A4.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர், இந்தியாவின் அழைப்புக்காக காத்திருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான தமிழ் மக்கள் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்காமல், தங்களது தனித்துவமான அபிலாசைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதனை புரிந்துக் கொண்டு தற்போதைய அரசாங்கம் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

அதேநேரம் தமிழினப் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் அரிசியல் தீர்வு போன்ற விடயங்களை கிடப்பில் விட முடியாது.

இந்த விடயத்தில் இந்தியாவினால் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புகள் இருக்கின்றன.

எனவே இந்த விடயங்கள் சம்மந்தமாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது.

அதற்கான அழைப்பு கிடைத்த உடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்வார்கள் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.