எங்கள் மக்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்

Tuesday, 03 December 2019 - 13:19

%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மலையக மக்கள் என்ன தீர்மானத்தை எடுக்கின்றார்களோ அதற்கு சார்பாக நாங்கள் செயல்படுவோம் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவர், வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான தெளிவுபடுத்தும் கூட்டம் அட்டன் மலையக மக்கள் முன்னணி காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒருசில அரசியல்வாதிகள் மலையக மக்களை கல்வியறிவு இல்லாதவர்கள் என்று கருதுகின்றார்கள்.

நான் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன்.

மலையக மக்கள் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.

எந்த ஒரு தீர்மானத்தையும் சரியாக எடுக்கக் கூடியவர்கள்.

வாக்களிப்பதில் தங்களுடைய சின்னத்தை மிகவும் அழகாக தெரிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கின்றார்கள்.

இன்று மலையகத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது.

எனவே எங்கள் மக்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.