பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் விசேட கோரிக்கை

Tuesday, 03 December 2019 - 13:23

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை பாடசாலையின் விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர் விசேட தினம் ஒன்றில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் செயலாளர் நாகஸ்தென்ன அருண தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் விடுமுறைக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் இதுவரை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் இலட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர் ஒரு விசேட தினத்தில் வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாகஸ்தென்ன அருண தேரர் குறிப்பிட்டுள்ளார்.