அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற முன்னாள் பிரதமர்

Tuesday, 03 December 2019 - 13:29

%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹநாயக்க தேர்களை இன்று சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் குடும்பத்தினருடன் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்னதேரரையும் சந்தித்து ஆசிப்பெறுக்கொண்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பட்டார்.

தனது பதவி காலத்தில் தனக்கான ஒத்துழைப்பை வழங்கியமைக்காக ரணில் விக்ரமசிங்க மஹாநாயக்கர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரமேதாஸவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்;டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.