இருவர் கைது..

Tuesday, 03 December 2019 - 15:40

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கரட் தொகைகளை உள்நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 22 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான சிக்கரட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் றாகம மற்றும் அங்கொட பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என விமான நிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.