குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யும்...

Friday, 06 December 2019 - 10:16

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
அதிகாரத்தை தூஷ்பிரயோகம் செய்ததாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபை குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யும் என சபாநாயகர் நான்சி பெலேஸி தெரிவித்துள்ளார்.

நமது ஜனநாயகம் எவ்வாறான நிலையில் உள்ளது என்றும், ஜனாதிபதி வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது போட்டியாளரான ஜோ பீடனை விசாரணைக்கு உள்ளாக்குவதற்காக, யுக்ரேனுக்கு நிபந்தனைக்கு உட்பட்ட இராணுவ உதவிகளை டொனால்ட் ட்ரம்ப் வழங்கியதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், ஜனநாயக கட்சியினர் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை பதவிநீக்க முயற்சித்தால் அவர்கள் விரைவாக வெளியேற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.