நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

Friday, 06 December 2019 - 13:34

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமது தடுப்பிலிருந்து அவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோது, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐதராபாத் நகருக்கு அருகில் கடந்த மாதம் 27 ஆம் குறித்த பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை விசாரணைக்காக கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேகநபர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள, காவல்துறையினரின் ஆயுதங்களை பறிக்க முற்பட்டு தப்பிச்செல்ல முயற்சித்த போது அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் 20 முதல் 26 வயதுடையவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.