புதிய பிரதமர் தொடர்பில் ஷியாற் முஸ்லீம் ஆன்மீக தலைவர் கருத்து

Friday, 06 December 2019 - 19:44

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
ஈராக்கிய பிரதமர் அடேல் அப்துல் மஃடி கடந்த வாரம் தாம் பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுபவர் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக செயல்படுபவராக இருக்க வேண்டும் என ஷியாற் முஸ்லீம் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார்.

சகல அரசியல் தலைவர்களும் தமக்கு இடையேயுள்ள மாறுபட்ட கருத்துக்களை அகற்றி, செயல்திறன் கொண்ட பிரதமரை நியமிப்பதில் இணைந்து செயல்பட வேண்டும் என ஈராக்கின் அதி உயர் ஆன்மீக தலைவர் அயொத்துல்லா அலி அல்-சிஸ்ரானி கோரியுள்ளார்.

ஈராக்கில் கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 400 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் படைத்தரப்பினரால் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பிரதமர் பதவி விலகுவதற்கான அறிவித்தலை விடுத்திருந்தார்.

கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைமையிலான படைதரப்பினர் ஈராக்கை ஆக்கிரமித்ததன் சடாம் ஹ_சேனின் நிர்வாகம் வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னர் ஈராக்கின் முக்கிய ஆதரவு அமெரிக்கா மற்றும் ஈரானுமே வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.