23 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இலங்கை...

Friday, 06 December 2019 - 19:52

23+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

இதுவரையில் 81 தங்கப் பதக்கங்கள் உள்ளடங்களாக 165 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம். 41 தங்கப் பதக்கங்கள் அடங்களாக 116 பதக்கங்களை மொத்தமாக பெற்றுள்ளது.

இலங்கை 23 தங்கம், 42 வெள்ளி மற்றும் 69 வெண்கலப்பதக்கங்களுடன், 134 பதக்கங்களை மொத்தமாக கைப்பற்றி மூன்றாம் இடத்தில் உள்ளது.

19 தங்கம் உட்பட 73 பதக்கங்களுடன் பாகிஸ்தான் நான்காம் இடத்திலும், 4 தங்கம் உள்ளடங்களாக 73 பதக்கங்களுடன் பங்களாதேஷ் 5ம் இடத்திலும் இருக்கின்றன.

மாலைத்தீவு 1 தங்கம் உட்பட 3 பதக்கங்களுடன் 6ம் இடத்திலும், பூட்டான் 6 வெண்கலப் பதக்கங்களுடன் எட்டாம் இடத்திலும் உள்ளன.