முதலாவது அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி

Friday, 06 December 2019 - 19:42

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+10%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
மேற்கு மியன்மார் ரோஹிங்ய சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணைகளின் முதலாவது அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா என்ற நாட்டை சேர்ந்தவர்கள், ஹெக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிரான வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மியன்மார் இராணுவம் ரோஹித்த சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை மேற்கொண்டதாகவும், வகைதொகையின்றி கொலை மற்றும் பாலியல் வல்லுறவினை மேற்கொண்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது.

கம்பியாவிற்கு ஆதரவாக 57 நாடுகளின் ஒத்துழைப்புடன், இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு இந்த மனுவினை சமர்ப்பித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களை மியன்மார் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

எப்படியிருப்பினும், மியன்மாரின் தலைவர் சான் சூ கீ முதலாவது நீதி மன்ற விசாரணையில் பங்கு கொள்வதற்காக ஹேக் செல்வார், என அவரது செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நலனை பாதுகாக்கும் நோக்கில் அவர் செயல்படுவார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மியன்மார் அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் மாறுபாட்டை கொண்டுள்ளதால் மியன்மாரின் தலைவர் சான் சூ கீ, ரோஹித்த சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த உண்மையினை வெளிப்படுத்த வேண்டும் என முஸ்லீம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதே மியன்மார் இராணுவம், தற்போதைய தலைவர் சான் சூ கீயை 15 வருடங்கள் வீட்டு காவலில் வைத்திருந்தனை குறிப்பிடத்தக்கது.