6 விக்கட்டுக்களினால் வெற்றி...

Saturday, 07 December 2019 - 7:22

6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20 க்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

ஹைதராபாத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய 18.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில், அணித் தலைவர் விராட் கோலி ஆட்டமிழக்காமல், 50 பந்துகளில், ஆறு நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக ஆட்டமிழக்கமால் 94 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி நாளைய தினம் திருவனந்தபுரத்தில் இடம்பெறவுள்ளது.