நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு...

Saturday, 07 December 2019 - 8:20

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81...
ஹைதராபாத்தில் காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நான்கு சந்தேநகபர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனையை காணொளியாக காட்சிப்படுத்தி சமர்ப்பிக்குமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காணொளி பதிவுகளை இன்று மாலைக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.

அதேநேரம், காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட நால்வரின் சடலங்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைவரை பாதுகாக்குமாறும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.30க்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் 27 வயதுடைய கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்து படுகொலை செய்த வழக்கில் சந்தேநபர்களாக கைது செய்யப்பட்டிருந்த நால்வரும், காவல்துறையினரால் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

அந்த சம்பவம் கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் காவல்துறை அதிகாரி சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.