மீண்டும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு...

Saturday, 07 December 2019 - 20:32

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81...
சிறிலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரோரா ஆகியோரை மீண்டும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழு இதனை தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்றைய தினம் குறித்த குழுவில் முன்னிலையாகினர்.

இந்தநிலையில் மேலதிக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி குறித்த மூன்று பேரையும் முன்னிலையாகுமாறு அந்த குழுவின் தலைவர் சட்டத்தரணி சஞ்சய கமகேவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.