அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்..

Monday, 09 December 2019 - 8:09

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
ஹொங்கொங்கில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

ஹொங்கொங் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஜனநாயக இயக்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஹொங்கொங்கின் மத்திய பூங்காவில் முன்னெடுக்கபட்டுள்ளது.

அந்த நாட்டின் எதிர்கட்சியான ஜனநாயக அமைப்பினரால் தொடர்ச்சியாக ஆறுமாத காலமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபட்டு வரும் நிலையில் அதனை வலு சேர்க்கும் வகையில் வார இறுதியில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டோர் கருப்பு நிறக்கொடிகளையும், பதாகைகளையும் ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் எதிரொலியாக அங்கு அண்மையில் இடம்பெற்ற மாவட்ட சபை தேர்தலில் எதிர்கட்சி பாரிய பலத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.