பிரதமர்-நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

Monday, 09 December 2019 - 16:41

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஸ்கேடாய் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது, புதிய பிரதமராக தெரிவான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவுஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் மேற்படி உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் கல்வி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பிலும் இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.