இவர்களுடைய வாக்குகள் எமக்கு கிடைக்கவில்லை- முன்னாள் பிரதமர்

Monday, 09 December 2019 - 19:36

%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
பௌத்த, இளைஞர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்கு கிடைக்காது போனமையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னடவை சந்தித்தன் காரணமாக முடக்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர்வரும் தேர்தலில் 113 நாடாளுமன்ற ஆசனங்களை எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் 105 நாடாளுமன்ற ஆசனங்களை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பௌத்த, இளைஞர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகள் கிடைக்காமல் போனமையே தேர்தல் தோல்விக்கான காரணம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பெற்று கொடுப்பதற்காக இன்று ஆரம்பமாகவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடாத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.