இன்றும் வாக்குமூலம் வழங்கிய சுவிஸ் தூதரக பெண் அதிகாரி

Monday, 09 December 2019 - 19:29

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
கடத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

அவர் இன்று பிற்பகல் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக குறித்த பெண் அதிகாரி கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்..

அத்துடன் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

இதன்போது அவரிடம் பல மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதனிடையே, கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதரக பணியாளருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை காலம், இந்த மாதம் 12ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே அவருக்கு இன்று வரையில் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை இன்று மீள நீடிக்கப்பட்டது.

அவர் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது அவரிடம் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்ட விடயத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுரைத்தனர்.