இதுவரையில் இலங்கைக்கு 36 தங்கப்பதக்கங்கள்

Monday, 09 December 2019 - 19:47

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+36+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை இதுவரை 36 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

அதேநேரம் 74 வெள்ளி மற்றும் 106 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 216 பதக்கங்களுடன் தரப்பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா 138 தங்கம், 83 வெள்ளி, 43 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 264 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் இதுவரை 49 தங்கம், 48 வெள்ளி, 78 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 175 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.